புதுக்கோட்டையில் இந்தியா ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி எம்கே சார்பில் 25 தோழர்கள் உடல் தானம்!!
புதுக்கோட்டை மாவட்டம்,இந்தியா ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி எம்கே சார்பில் புதுக்கோட்டையில் 25 தோழர்கள் உடல் தானம் செய்தனர்.மாநில இயற்கை வளங்கள் துறை மற்றும் சட்ட துறை அமைச்சர். எஸ். ரகுபதி அவர்கள் பங்கேற்று அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார்.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி எம் கே மாநில செயலாளர் தோழர் எஸ் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார் விழாவில் மாநகர மேயர் திலகவதி செந்தில் துணை மேயர் லியகாத்அலி திமுக வடக்கு மாவட்ட தலைவர். வீரமணி மாநகராட்சி உறுப்பினர் செந்தாமரைப்பாலு ஆகியோர் பங்கேற்றனர் கட்சியினுடைய மாவட்ட செயலாளர் எம் என் ராமச்சந்திரன் மாவட்ட துணை செயலாளர் ஆர் சொர்ண குமார் மாநகரச் செயலாளர் ரமேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அம்பியாவதி செல்லப்பா காளிமுத்து உள்ளிட்ட 25 தோழர்கள் உடல் தானம் செய்து சான்றிதழ் பெற்றனர் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட குழுவின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொன்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக