நேர மேலாண்மை 24×7 !!

நேர மேலாண்மை :

           வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்கள் கையிலும் 24 மணி நேரம்தான். நேரமே போதவில்லை என கூறுபவர்களுக்கும் அதே 24 மணி நேரம்தான்.

          ஏன் இந்த வித்தியாசம் நேரம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் தான் திறமை உள்ளது. ஒரு வேலையை சிறப்புடன் செய்ய திட்டமிட்டு நேரம் முன்னுரிமை அளித்து செய்வதால் நிறைய நல்ல விஷயங்கள் கிடைக்கிறது. நம் வேலையும் நேரத்திற்கு நடக்கும் இதனால் வேலை செய்ய முடியாமல் ஏற்படும் மனு அழுத்தம் பதட்டம் குறைகிறது. உற்பத்தி திறன் அதிகரிக்கிறது தள்ளிப்போடும் பழக்கம் இருந்தால் அதை முதலில் நிறுத்தினாலே நேரம் வேளாண்மை தொடங்குகிறது எனக் கொள்ளலாம். 

 நேர மேலாண்மையில் சில:

1, தினம் நம் என்ன வேலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு கைகளால் எழுதி வைத்து செயல் ஆரம்பிக்கும்  பழக்கம் மிக  நல்லது.

2.  செய்யும் வேலைகளில் எது முக்கியம் என்று வகைப்படுத்தி அதை முதலில் செய்து முடிக்க வேண்டும்.

3.  காலையில் செய்ய வேண்டிய வேலை மாலையில் செய்ய வேண்டிய வேலை என பிரித்து வகைப்படுத்தி அதை செய்து முடித்தல் 

4.  பெரிய வேலைகளை பகுதி வேலைகளாக பிரித்து ஒவ்வொரு வேலையாக செய்து முடிக்கும் பொழுது அந்த பெரிய வேலை முழுவதும் நம்மால் சுலபமாக செய்ய முடியும்.

5.  தேவையற்ற செயல்களை தவிர்த்தால் அதிக செயல்திறன் கூடும் 

6.  சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்து முடிக்கும் பொழுது, செயல் வெற்றியடைந்து நம் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

7.  நம்முடைய வேலைகள் சரியான வழியில் திட்டமிட்டபடி செல்கிறதா என்பதை வளர்ச்சி போக்கில் உள்ளதா என்று அடிக்கடி ஆராய்தல் மிக அவசியம்.

 நேர மேலாண்மை முறைகள் :

போமோடோரோ முறை:

  சிறு சிறு ஓய்வு நேர இடைவெளியில் ஒரு பெரிய வேலையை நாம் செய்யும்பொழுது அது சிறப்பாக செய்து முடிக்க முடியும் 25 நிமிட வேலை ஐந்து நிமிட ஓய்வு இதை தொடர்ச்சியாக நாம் செய்தல் முறையாகும்.

 ஐசோனோவா மேட்ரிக்ஸ் :

 முக்கியத்துவம் கொடுத்த வேலைகளை முதலில் செய்து முடித்தல்.

 இவ்வாறு நேர மேலாண்மை என்பது அனைத்து துறை மக்களுக்கும் படிக்கும் மாணவர்களுக்கும் தொழில் முனைவருக்கும் மிக அவசியம்.திறமைகள் அதிகம் இருந்தாலும் அதை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தி நாம் செயல்படும் பொழுது வெற்றி நிச்சயம்.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!