காந்திநகர் துளிர் பள்ளியில் 23 ஆம் ஆண்டு கலை விழா ஓய்வு பெற்ற மாவட் டக் கல்வி அலுவலர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டு!!

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர்  துளிர் கலை மற்றும் அறிவியல் ஆய்வுப் பள்ளி யின் 23வது ஆண்டு கலை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தளாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.  முன்னதாக பெற் றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் வி.பழனி வரவேற்று பேசினார்.  பள்ளி தலைமையாசிரியை த.கனகா, ஆண்டறி கை சமர்த்து பேசினார்.  பரிசு சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார் ஓய்வு பெற்ற மாவட்டக்கல்வி அலுவலர்கள் கோ.பழனி, கோபால இராசேந்திரன், இராணிப்பேட்டை மாவட்ட நல அலுவலர் பி.சுமதி ஆகியோர் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். 

வாழ்த்துரை கவிஞர். ஆர்.சீனிவாசன் அறிவுத்தோட்டம் மற்றும் மக்கள் நலச் சந்தையின் ஒருங்கிணைப்பாளர் கு.செந் தமிழ்செல்வன்,  அறங்காவலர்கள் கே. குண சுந்தரி, மனோகரி சுவாமி நாதன் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி கிளை தலைவர் ஆர்.சுதாகர், இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை செயலாளர் எஸ்.எஸ். சிவவடிவு  ஓய்வுபெற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலர் மு. சுவாமிநாதன்,  ஆகியோர் வாழ்த்தி பேசினர்பள்ளி மாணவர்களின் மாறுவேட போட்டி, இசை, நடனம், நாடகம், உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றது.  பள்ளி ஆசிரியைகள் சே.சித்ரா, சு.மலர்கொடி, வெ.பாரதி,  தணிகைசெல்வம், கோரந் தாங்கல் உதவி அஞ்சலக அலுவலர் வெ. கலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை யாசிரியை சே.சித்ரா நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!