திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா-2026 மற்றும் விருதளிப்பு விழா!!

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் சார்பில், உலக மகளிர் தின விழா-2026 மற்றும் விருதளிப்பு விழா கடந்த 2026, மார்ச்,7, அன்று மாலை 6.30 மணிக்கு, ஆதீன வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாட்டின் மேனாள் அமைச்சர் திருச்சி ந.நல்லுசாமி அவர்கள் தலைமையேற்று துறை சார்ந்த மகளிருக்கு விருதுகளை வழங்கி பேசினார். அவரது வாழ்த்துரையில், புதுக்கோட்டையில் தமிழ்ப்பணியினை மிகவும் சிறப்புடன் தொடர்ந்து நடத்தி வருகின்ற ஆதீனமாக திலகவதியார் ஆதீனம் விளங்குவதாகவும், அதற்கு காரணமாக ஆதீன சுவாமிகள் இருப்பதாகவும் கூறியவர், இன்று விருது பெறும் மங்கையர்களின் திறத்தை பாராட்டுவதாக கூறியவர், தமிழ்மொழியின் சிறப்புக்களை, சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி உரையாற்றினார், பழங்காலத்தில் பெண்பால் புலவர்கள் பலர் இருந்துள்ளதை குறிப்பிட்டு பேசினார். தமிழ்த்தாத்த உவே.சா. அவர்களின் அருந்தொண்டினை நினைவு கூர்ந்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை நல்கிய புதுக்கோட்டை துணைக்காவல் கண்காணிப்பாளர். இரா.பிருந்தா அவர்கள் பேசுகையில், ஆண்பால் ஆதீனங்களாக உள்ள நிலையில், புதுக்கோட்டையில் முதல் பெண்பால் ஆதீனமாக விளங்கி வரும் திலகவதியார் திருவருள் ஆதீனம் விளங்குவதை சுட்டிக்காட்டி, அத்தகைய சிறப்பு பெற்ற ஆதீன விழாவில் பங்கேற்பதை பெருமை கொள்வதாக கூறியவர், பெண்களிடம் உடலிருந்து வியர்வையைத்தான் சிந்த வேண்டும். கண்ணீர் சிந்தக்கூடாது என்றவர். தான் படித்து குரூப் 1 சர்வீஸ் தேர்வானதற்கு காரணங்களை அழகுபட கூறினார். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஆணுக்கு நிகராக பெண்களும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் உறுதியோடு இருக்குமானால் பெண்கள் அனைத்திலும் வெற்றி பெறுவர் என்றார்.

விழாவில், மருத்துவச்சேவைத் திலகம் விருது, மகப்பேறு மருத்துவர் டாக்டர் அனிதா தனசேகரன் அவர்களுக்கும், கல்விப்பணிச்சேவைச் செம்மல் விருது ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர். செ. கவிதா அவர்களுக்கும், எழுத்துச்செம்மல் விருது .சங்கமித்ரா தனபதி அவர்களுக்கும், செவிலிச்சேவைச் செம்மல் விருது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர். இந்திராகாந்தி அவர்களுக்கும், சிறந்த இளம் பேச்சாளர் விருது செல்வி, திஷா திரவியராஜ் ஆகியோருக்கு மு. அமைச்சர். ந. நல்லுசாமி வழங்கினார்.

விழாவில், திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் விருதுகளை பெற்ற மங்கையர்களை வாழ்த்தி ஆசியுரை வழங்கினார்.

மகளிர் தின கவிதையினை டாக்டர்ஸ் காலேஜ் &ஸ்கூல் ஆஃப் நர்சிங் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவி செல்வி. பனிமய கரோலின் வழங்கினார். நான்காம் ஆண்டு மாணவி செல்வி.ரா.சோபனா தேவி சிற்றுரையினை வழங்கினார்.

விழாவிற்கு, சர்வஜித் அறக்கட்டளை தலைவர் டாக்டர்.எஸ்..இராமதாஸ், உலக திருக்குறள் பேரவைத் தலைவர். மு.இராமுக்கண்ணு, ஸ்ரீபாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி இயக்குநர் முனைவர். மா.குமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் அரசு மன்னர் கல்லூரியின் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சி. சேதுராமன் வரவேற்றார். நிறைவாக திரு.மத்தியாஸ் நன்றி கூறினார். விழாவினை  அனுராதா சீனிவாசன் இணைப்புரை வழங்கினார்.

இந்நிகழ்வில், அரசு அருங்காட்சியக மேனாள் உதவி இயக்குநர் முனைவர்.ஜெ. இராஜாமுகமது, மாவட்ட முதன்மை கல்வி மேனாள் அலுவலர் . எஸ்.சிவாஜி, மாவட்ட வர்த்தகக் கழக துணைத்தலைவர் .சாந்தம் எஸ்.சவரிமுத்து, பேரா. எஸ்.விசுவநாதன்,டாக்டர்.எஸ்.இராமமூர்த்தி, டாக்டர்.வி.என்.சீனிவாசன், விவசாயிகள்சங்கபொதுச்செயலர்.ஜி.எஸ்.தனபதி, கவிஞர் மன்ற தலைவர் கவிஞர்.நிலவை பழனியப்பன், வங்கி மேனாள் அலுவலர் ந.கலைச்செல்வன், கூட்டுறவு ஒன்றிய மேலாளர். பா, பிரபாகரன், தமிழக சமயநல்லிணக்க ஒற்றுமைமேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் .மு.அசோகன், விஜி குளிர்பானகம் . நாடிமுத்து, திருச்சிராப்பள்ளி நோட்டரி பப்ளிக்  ரமேஷ் மற்றும் டாக்டர்ஸ் காலேஜ் & ஸ்கூல் ஆஃப் நர்சிங் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார். தொழிலதிபர் வி.ஜி.பி குழுமத்தலைவர் டாக்டர், வி.ஜி.சந்தோசம், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர்  எஸ்.ஜெகதீசன். திரைபாடகர் கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன், காரைக்குடி தமிழ்க்கல்லூரி மேனாள் முதல்வர் பேரா.தெ. முருகசாமி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!