2026 தேர்தலை முன்னிட்டு திட்டக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர். சிவே கணேசன் விருப்பமனு!!

வருகிற2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனி சட்டமன்ற தொகுதிக்கான விருப்பமனுவை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவே கணேசன் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் இணைந்து அண்ணா அறிவாலயம் வளாகத்தில் விருப்பமனுவை வழங்கினார் அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கழக நிர்வாகிகளும் கூறி இருப்பது

வரும் தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் அமைச்சர் சிவே கணேசன் அவர்கள் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, “வரும் தேர்தலில் அமைச்சரை மீண்டும் வெற்றி பெறச் செய்து அமைச்சராக அமரச் செய்வோம்; அதற்காக கடுமையாக உழைப்போம்” என்று உறுதியெடுத்தனர்.

2026 தேர்தலை முன்னிட்டு திட்டக்குடி தொகுதியில் அரசியல் பரபரப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!