மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பொது தேர்தல் 2026 பணியின் பறக்கும் படை கண்காணிப்பு குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு !!
வேலூர் மாவட்டம்,தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ல் தேர்தல் பணி யில் ஈடுபடவுள்ள பறக்கும் படை குழு மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி இ.ஆ. ப. அவர்கள் தலைமையில் இன்று (05.03.2026) ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பி ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) (பொ) பொ.குண சேகரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேலூர் சட்டமன்ற தொகுதி வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார். குடியாத்தம் சட்டமன்ற தொகுதி/ குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி. காட்பாடி சட்டமன்ற தொகுதி தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமாறன். கீ.வகுப்பம் சட்டமன்ற தொகுதி மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி/ உதவி ஆணையர் (கலால்) பிரகாஷ், தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக