2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்!!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் மத்திய பாதுகாப்பு படையினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் மத்திய பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தேர்தல் காலத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும், தேர்தல் பணிகள் முழுமையாக சீராக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கவும் காவல்துறையினரும் மத்திய பாதுகாப்பு படையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக