ராணிப்பேட்டையில் 2026 தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த ஜெ.யு.சந்திரகலா IAS!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.3.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ல் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
தொடர்ந்து, தேர்தல் விழிப்புணர்வு குறித்து வைக்கப்பட்டிருந்த Voters Selfie Point ல் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுடன் Selfie புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
இந்த தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் இரண்டு சக்கர பெட்ரோல் வாகனங்களுடன் கலந்து கொண்டனர். இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி இராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் வரையில் சென்று முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக