குடியாத்தத்தில் 2026 சட்டமன்ற பொது தேர்தல் சம்பந்தமாக 35 வது வார்டு அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் 35 வது வார்டு .அ.தி.மு.க சார்பாக . நடைபெற உள்ள குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் வட்டச் செயலாளர். ஜெயமணி பாபு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி கலந்து கொண்டு வரும் சட்டமன்றத் தேர்தலை . எதிர்கொள்வதை பற்றி ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் மாவட்ட கழக துணை செயலாளர். கஸ்பா ஆர். மூர்த்தி நகர கழக இணை செயலாளர். அமுதா கருணா முன்னாள் நகர செயலாளர் சேவல். நித்தியானந்தம் வார்டு கழக நிர்வாகிகள். இ. டி. பாஸ்கர், ஆர். செல்வம், இ. ஆர். மேகநாதன். கே. வி. ராஜேந்திரன், மூர்த்தி,அக்பர் ஷெரிப். ஜெகதீசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கௌதமி நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக