குடியாத்தம் செருவங்கி நகராட்சி துவக்க பள்ளியில் 2026 -2027கல்வி ஆண்டில் முதல் வகுப்பு மாணவர்கள் 10 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி நகராட்சி துவக்கப்பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு கேசவன் எழுதுகோல் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கி உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமி தலைமை தாங்கினார் . வட்டார கல்வி அலுவலர் திரு பரமசிவம் வெங்கட் குமார் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு அழைப்பாளராக பள்ளி மேலாண்மை குழு இராசி. தலித் குமார் கலந்து கொண்டார். உடன் உதவி ஆசிரியர்கள் செர்லி கோமதி மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக