அறந்தாங்கி அப்துல்ஹமீது தெருவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 137 சவரன் நகை கொள்ளை போலீஸ் விசாரணை!!
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி நகரின் முக்கிய பகுதியில் அப்துல்ஹமீது தெரு உள்ளது. இங்கு ஹாஜாநஜிமுதீன், கிரீன்முகமது ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகைக்காக சொந்தமான 2 ஹாஜாநஜிமுதீன், கிரீன்முகமது ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சிறப்பு தொழுகைக்கு சென்றுள்ளனர். அப்போது சமயம் பார்த்து காத்திருந்த மர்ம நபர்கள் பூட்டியிருந்த 2 வீடுகளின் கதவை உடைத்து உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 137 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
தொழுகைக்கு சென்று வீடு திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகரின் முக்கியமான தெருவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் பட்டாகத்தி கம்பிகள் உடன் அந்த வீட்டின் அருகிலும் வீட்டிலும் சுற்றித்திரிந்த சிசிடிவி பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.




கருத்துகள்
கருத்துரையிடுக