நெய்வத்தளியில்11- ஆம் நூற்றாண்டு பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் நெய்வத்தளி சிவன் கோவிலில் வரலாற்று ஆய்வாளர்கள் பராக்கிரம பாண்டியன் (கி.பி 1150) கல்வெட்டு கண்டறிந்துள்ளனர். அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் கா. காளிதாஸ் மற்றும் ஆய்வு மாணவர்கள் விஜயலட்சுமி, அபினேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் இது கோயில் கல்வெட்டுகளை நேரில் சென்று ஆய்வு செய்து படி எடுத்தனர். கல்வெட்டு செய்தி குறித்து பேராசிரியர் காளிதாஸ் கூறியதாவது, இக்கல்வெட்டு கோச்சடைய பன்மரான திருவாசகர் வட்தன் வீர பராக்கிரம பாண்டியன் (பொ.ஆ.1153) கல்வெட்டாகும். நெய்வேலி நாதர் கோயிலுக்கு இறையிலியாகக் கொடுத்த நிலத்தில் வீட்டுக்கு ஒரு ஆளும் ஒரு ஏறும் சென்று உழவு செய்து கொடுக்க வேண்டும். மீறுபவர்கள் சிறைத்தண்டனை பெறுவார்கள் என்ற செய்தி உள்ளது. சிறைச்சென்றவரை மீட்கச் சிறைப் பணம் ஒன்று செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுவரிச் செய்தி :
1.ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடைய பன்மரான திருவாசகர்வட்தன் வீர பராக்கிரமபாண்டிய தேவர்க்கு யாண்டு ங_வது
2.... வடவெள்ளாரான சுந்தரபாண்டிய வளநாடு பனங் கைய நாட்டு அரசர்குள பற்று
3.குலசேகர பல்லவராய நநே நாடால்வாருக்கு இறை நிச்சையித்து குடுத்த பரிசாவது அத்க் சரி பயிர் பாத்து பமா நின்ற நிலத்துக்கு
4.மாத்தால் அங்கல நெல்லும் மாத கலத்துக்கு நெல்லு கலம் பெற முதல்லுக்கு பணம் ஒன்றும் பிள்ளை வளவர்ப்பன்
5.ம் பாதியும் அடைபட்ட நிலத்துக்கும் மாத்தால் நார்க் வணியம் வன்னந் பிடசல அரைய குளத்து பிடை சல் இரண்
6.மற்றுமுள்ளவர்க்கும் பிடைசல் ஒன்று இட கடவதாகவும் ஆண்டு கொள்ளவும் ஒரு ஏரும் ஒரு ஆளும் உழக்கடவதாகவும்
7.கடவதல்லால் யாராகவும் சிறையில் வைத்த வலன் உள்ளூர் நேர் புவனை நின்று விடுவிக்க கடவராகவும்
8.சிறைதாயத்தார் அல்லமல் பணைந்தர உளர் நெர்பு வனை பணக கடவதாகவும் சிறை பணம் ஒரு பணம்
9.கொள்ள கடைவதாகவும் இதைக் கொட வைப்பவை வாளாதொழிய வினையம் எடுக்க கடஅவதாகவும் .
என்ற செய்திகள் கல்வெட்டில் உள்ளது என்றார். அன்றைய காலத்தில் உழவுத் தொழிலை சிறப்படைய செய்ய மன்னர்கள் கடுமையான தண்டனை விதித்து, வீட்டுக்கு ஒரு ஆள் போருக்கு வரவேண்டும் என்ற மன்னர் ஆணைப்படி வீட்டுக்கு ஒரு ஆள் ஒரு ஏர் என்ற முறையில் வேளாண்மை செய்து நாட்டை வளப்படுத்தி உள்ளனர். இது மாதிரியான பழம் பண்பாட்டுச் சின்னங்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என்றார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக