திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு; ஒப்பந்தம் கையெழுத்து!!
திமுக கூட்டணியில் தேமுதிக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் இன்று (24-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாட்டில் 10 (பத்து) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக