அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள், கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது!!
புதுக்கோட்டை மாவட்டம்,தமிழகத்தில் எதிர் வருகின்ற ஏப்ரல் 23 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கபடி போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், முதன்முதலாக வாக்களிக்கவிருக்கும் மாணவ மாணவியர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் கோட்டாட்சியர் விளக்கவுரையாற்றினார். தொடர்ந்து விழிப்புணர்வு உறுதி மொழியேற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் துரை,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் கவியரசு, வட்டாட்சியர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் சுரேஷ், தேர்தல் துணை வட்டாட்சியர் சக்கரபாண்டியன், உதவி பேராசியர் பாலமுருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்ட உதவி பேராசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.




கருத்துகள்
கருத்துரையிடுக