புதுக்கோட்டையில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மனித சங்கிலி மற்றும் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சித் தலைவர்!!
புதுக்கோட்டை மாவட்டம்,100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மனித சங்கிலி மற்றும் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சித் தலைவர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அதற்கான பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மும்முரமாக செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் நூற்றுக்கு நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் கடைவீதியில் மனித சங்கிலி அமைத்தும் முத்துக்குடா சுற்றுலா தளத்தில் மன்னர் சிற்பத்தால் ஆன விழிப்புணர்வு சிலையை அமைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான அருணா மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் அபிநயா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து இந்த நிகழ்ச்சி ஆனது மீமிசல் கடைவீதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்காளர்கள் மூலம் அமைக்கப்பட்ட மனித சங்கிலியை துவக்கியதோடு சுற்றுலாத்தலமான முத்துக்குடா கடற்கரையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களால் அமைக்கப்பட்ட சிற்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.
வாக்காளர்கள் அனைவரும் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளால் இது போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.





கருத்துகள்
கருத்துரையிடுக