திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணல்: 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை!!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் மார்ச்-7 அன்று  வளாக நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட மாணவர்களைத் தேர்வு செய்தனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர். ம.ஆண்டோ அலோசியஸ் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர். குழ.முத்துராமு தலைமையுரை ஆற்றுகையில், மாணவர்கள் தங்களின் தொழில்முறை திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் உலகளாவிய வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் என்றும், அதற்கு இக்கல்லூரி என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இம்முகாமில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற  டாக்கோ மெகா நிறுவனத்தின் மனிதவள மேலாளர் முனைவர்.  வில்லியம், டி.எஸ். கனெக்டர்ஸ் நிறுவனப் பொது மேலாளர். யோகானந்த், பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதுநிலை மேலாளர்.  ஜான் பிரிட்டோ, எஸ்.என்.ஒய் ஆட்டோடெக் நிறுவன மேலாளர்.  பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு, இன்றைய நவீனத் தொழில் உலகில் மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விளக்கினர்.

திறனறித் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

டாக்கோ மெகா நிறுவனம் சார்பில் சிவில் துறையின் 9 மாணவர்கள் , டி.எஸ். கனெக்டர்ஸ் நிறுவனம் சார்பில் 31  மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர்கள்,  பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் இயந்திரவியல் துறையின் 19 மாணவர்கள்,  எஸ்.என்.ஒய் ஆட்டோடெக் நிறுவனம் சார்பில் இ.சி.இ. துறையில் 31 மாணவர்களும்,  இயந்திரவியல் துறையில் 19 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு கல்லூரியில் மொத்தம்   நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பணி நியமனக் கடிதங்கள்  வழங்கப்பட்டன்.

சிறப்பான முறையில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களைக் கல்லூரி தாளாளர் டாக்டர்.  பிச்சப்பா மணிகண்டன், நிர்வாக இயக்குனர் . ம. பிச்சப்பா, மற்றும் செயலாளர். மு. விஸ்வநாதன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.நிகழ்ச்சியின் நிறைவாக,  இயந்திரவியல் துறை உதவிப் பேராசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!