ஶ்ரீ ராமநவமையை முன்னிட்டு சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீதா ராமர் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் மூன்றாவது நாளாக நடைபெற்ற பரதநாட்டியம் நிகழ்ச்சி !!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் உள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீதாராம ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு 27 ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை சீதை திருமணம், நாடக மயில், பரதநாட்டியம், திருவடி சூட்டு விழா, சடாயு வீடு பேறு, வாலி வதம்,, ராவண வதம்,ராமர் முடிசூட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.
இதனை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக ஏராளமான சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவிகள் பரதநாட்டியத்தில் கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடினர்.
இந்த பரதநாட்டியத்தில் ராமர் சீதை திருமணம் உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கு சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் வெகு சிறப்பாக பரதநாட்டியம் ஆடினர்.
இந்த பரதநாட்டியத்தை ஏராளமான பொதுமக்களும் பெற்றோர்களும் பரதநாட்டியத்தை கண்டு களித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக