ஆற்காடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு கலெக்டர். சந்திரகலா IAS!!
ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திரகலா IAS அவர்கள் ஆற்காடு பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். உடன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை செந்தில்குமரன் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏகாம்பரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் மற்றும் பலர் உள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக