ஆலங்குடியில் 100% வாக்களிக்க வேண்டும் என மெழுகுவர்த்தி ஏற்றி விழிப்புணர்வை தொடங்கி வைத்த மு. அருணா IAS !!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலங்குடி பேரூந்து நிலையத்தில் மெழுகு வர்த்தி ஏற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர். மு. அருணா IAS, மாவட்ட வழங்கல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர். சோபா, ஆலங்குடி வட்டாட்சியர். ஜபருல்லா, உள்ளிட்ட அரசு அதிகாரிகள்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அதற்கான பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மும்முரமாக செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஆலங்குடி சட்ட மன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் நூற்றுக்கு நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆலங்குடி பேருந்து நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்தனர்.
வாக்காளர்கள் அனைவரும் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளால் இது போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அரசு அலுவலர்கள் சத்துணவு பணியாளர்கள் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் வருவாய்த்துறை வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக