புதுக்கோட்டை: கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்!!
புதுக்கோட்டைமாவட்டம்,கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன் இறங்கு தளத்தினை மேம்படுத்தும் நோக்கில் ௹ 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்தது. அதன் தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நேரில் வந்த மாவட்ட ஆட்சியர் அருணா குத்து விளக்கேற்றி, மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மீன் வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக