அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1 அன்று பிறந்த குழந்தைக்கு மோதிரம் வழங்கல்!!


புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவ மனையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மார்ச் 1 அன்று பிறந்த குழந்தைகளுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர்  ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  மெய்யநாதன் ஆகியோர் மோதிரம் வழங்கினர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுகவினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவ மனையில் மார்ச் 1 அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர்  ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  மெய்யநாதன் ஆகியோர் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து, பரிசு பெட்டகங்களை வழங்கினர்.

முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் உறவினர்களிடம் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஆனந்த், நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விமல் உள்ளிட்ட நிர்வாதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!