PMT கே. என். இசக்கி ராஜா தேவர் தலைமையில் நடைபெற்ற இல்ல விழா!!
மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள செல்லம்–குருசாமி சமுதாயக்கூடத்தில், திரு. . முனியசாமி – திருமதி முருகேஸ்வரி அவர்களின் இல்ல விழா 08.02.2026 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த இல்ல விழா PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் திரு. K.N. இசக்கி ராஜா தேவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் இல்ல உரிமையாளர்களை நேரில் வாழ்த்தி, வாழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துரை வழங்கி விழாவை சிறப்பித்தார்.
மேலும், தின நியூஸ் ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் திரு. இராமநாதன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், இயக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இல்ல உரிமையாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். மங்களகரமான நிகழ்வுகளுடன், ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்த இல்ல விழா அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது விழா சிறப்பாக நடைபெற்றது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக