கம்பம் அருகே -K.K.பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகன விபத்து!!
தேனி மாவட்டம், கம்பம் அருகே KK.பட்டி செல்லும் சாலையில் சின்ன வாய்க்கால் அருகில் சற்றுமுன் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஒருவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நிலையில் கிடந்தார்.
மற்றொருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்து பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், அவ்வழியாக சென்ற ஆட்டோவில் காயமடைந்தவர்களை ஏற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு (வடக்கு)காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்திற்கான முழு காரணம் குறித்து விபத்தில் காயம் அடைந்தவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக