ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி – II & IIA)
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி – II & IIA -க்கான முதன்மைத் தேர்வு இராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 08.02.2026 (ஞாயிற்றுகிழமை) அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. மொத்தம் 01 தேர்வுக்கூடங்களில் 173 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுக்காக கூடுதல் சிறப்பு பேருந்து வசதிகள், தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்கு முற்பகல் 08.30 மணி முதல் 09.00 மணி வரை மற்றும் பிற்பகல் 01.30 மணி முதல் 02.00 மணிக்குள் வருகை புரிய வேண்டும்.மேலும் காலை 09.00 மணிக்கு மேல் மற்றும் பிற்பகல் 02.00 மணிக்கு மேல் தாமதமாக வருபவர்கள் தேர்வு கூடத்திற்குள் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு காலதாமதமாக வராமல் குறித்த நேரத்திற்கு முன்பு தேர்வு மையத்திற்கு வரவேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக