தேனியில் தீப எண்ணெய் உற்பத்தி செய்யும் மில்லில் மர்ம நபர்கள் திருட்டு – CCTV காட்சிகள் வெளியீடு!!

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ரமேஷ், தேனி பைபாஸ் சாலையில் இலவம் பஞ்சு விதை மற்றும் தீப எண்ணெய் உற்பத்தி செய்யும் மில்லை நடத்தி வருகிறார். நேற்று மில்லுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில் பூட்டப்பட்டிருந்த மில்லின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த விலை உயர்ந்த எந்திர உதிரிபாகங்கள் மற்றும் பூஜை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் தற்போது வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திருட்டில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண போலீசார் CCTV காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!