நத்தம் பேரூராட்சியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா!!

திண்டுக்கல் மாவட்டம்,தமிழ்நாடு முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையொட்டி நத்தம் பேரூராட்சியில் நடந்த விழாவிற்கு திமுக மேற்கு மாவட்ட பொருளாளர். விஜயன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்ண் ஆண்டி அம்பலம், ஒன்றியச் செயலர்கள். பழனிச்சாமி, ரத்தினக்குமார், நகரச் செயலர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்திருந்த அனைவரையும் செயல் அலுவலர் விஜயநாத் வரவேற்றார். இதில் பேரூராட்சித் தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா  தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்து பேசியபோது,

நத்தத்தில்  பேரூராட்சி தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதில் குறிப்பாக நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி , மின்மயானம், குப்பைக் கிடங்கு நகர்ப்பகுதியிலிருந்து மாற்றப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி காரர்கள் இந்த வாக்குறுதிகள் எதற்கு? இதெல்லாம் நிறைவேற்ற முடியுமா? என்றார்கள். ஆனால் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நமது அமைச்சர்கள் ஊராட்சித் துறை அமைச்சர். ஐ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இருவரும் தொடர்ந்து முதல்வர். ஸ்டாலின் அவர்களிடம் கூறி கல்லூரியை பெற்றுத் தந்தார்கள். இந்த அரசு கல்லூரி இங்கு வந்ததன் மூலம் 280 மாணவர்கள் அங்கு பயிலுகிறார்கள் என்பதை விட அந்த மாணவர்களின் குடும்பத்தினர் சந்தோஷத்துடன் உள்ளனர். இது தவிர இங்கு பயிலும் மாணவர்கள் அரசு மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் அறிவுசார் மையம் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அவை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் இப்பகுதி மக்களின் கல்வித் தரம் உயர்ந்து வாழ்வாதாரம் சிறக்க வழி வகுக்கும். காலையில் பசியுடன் வேலை செய்வது என்பது உடல் நலத்திற்கு மிகுந்த கேடு என்பதை அறிந்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதே போல்   தூய்மை பணியாளர்களும் அதிகாலையிலேயே வேலைக்கு வந்து விடுவதால் அவர்களின் பசியின் தன்மையை உணர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்கள். இதை தொடர்ந்து இங்கு பணி புரியும் 79 பேர் இதில் பயன் அடைவார்கள். எனவே தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இடம் பெறும் வகையில் ஆட்சி செய்யும் தமிழ்நாடு முதல் அமைச்சர். ஸ்டாலின் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்று பேசினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி,  மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர். மகேஸ்வரி சரவணன், தூய்மை பணி ஆய்வாளர். செல்வி சித்ரா மேரி, தலைமை எழுத்தர். பிரசாத்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்.  வசந்த சுஜாதா, கலாவதி, இஸ்மாயில், ராமு, மாரிமுத்து, பழனிக்குமார், உசன் பரிதா உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!