ராணிப்பேட்டையில் சத்துணவு ஊழியர்களின் போராட்டம்: பகுஜன் சமாஜ் கட்சி நேரில் ஆதரவு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் இன்று 8-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த தர்ணா போராட்டத்தில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி (TMBSP) நேரில் கலந்து கொண்டு தனது ஆதரவை வழங்கியது.

 மாநில கொள்கை பரப்பு செயலாளர் மகேந்திரன்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த நிகழ்விற்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர். புரட்சி குணா தலைமை தாங்கினார். 

சுமன் – மாவட்டத் தலைவர். பாலமுருகன் – மாவட்டத் துணைத் தலைவர்.

 வினோத் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

 சலாவுதீன் – மாவட்டத் துணை அமைப்பாளர் முன்னிலை வகித்தனர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

போராட்டக் களத்தில் இருந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு, கட்சியின் சார்பில் குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு தங்களது ஆதரவை பதிவு செய்தனர்.

நிகழ்வின் நிறைவாக,  காரை அர்ஜூன் நன்றி கூறினார்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!