திருச்சியில் மான்சா காலிகிராபி நிறுவனம் நடத்திய கையெழுத்து போட்டியில் ஒட்டி மொத்த சேம்பியன் பட்டத்தை வென்ற திருக்கோகர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்!!
மான்சா காலிகிராபி நிறுவனம் திருச்சியில் நடத்திய கையெழுத்துப் போட்டியில் புதுக்கோட்டை, திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த சேம்பியன் பட்டத்தை வென்றது. மொத்தம் 26 பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்றன. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்கு பெற்றனர். மாணவர்களின் அழகான கையெழுத்துத் திறமையை வளர்க்கும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட இப்போட்டியில் புதுக்கோட்டை, திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 64 மாணவர்கள் பங்கு பெற்றனர். நடுவர்கள் குழு வழங்கிய முடிவின் படி இப்பள்ளி மாணவர்களின் அழகான கையெழுத்துத் திறனுக்காக இப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டன. பங்குபெற்ற 26 பள்ளிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் விருது புதுக்கோட்டை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. பரிசுகள் விருதுகள் பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி, இயக்குநர் ஆர். சுதர்சன், துணை முதல்வர் எஸ். குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் பாலசங்கர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக