நத்தத்தில் உயர்நீதி மன்ற ஆணையின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு மருத்துவமனைப் பகுதியில் திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இதில் வேலம்பட்டி கிராம ஊராட்சியில் திண்டுக்கல் பிரதான சாலையை மையமாக வைத்து இருபுறமும் ஜவுளிக்கடை,உணவங்கள், பலசரக்கு கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் முன் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய களப் பொறியாளர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் நத்தம் வட்டாட்சியர் பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ). ரவீந்திரன், கிராம நிர்வாக அலுவலர் முத்து, பேரூராட்சி தூய்மைப் பணி ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள், சாலையோர கடையினர் உள்ளிட்டோர் தங்களின் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தந்தனர். இதற்கான பாதுகாப்பு பணிகளில் நத்தம் காவல் ஆய்வாளர் பொன்.குணசேகரன் தலைமையிலான போலீஸார் ஈடுபட்டனர்.
படவிளக்கம்: நத்தம் வேலம்பட்டி கிராமம் திண்டுக்கல் செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரைவீரன்


கருத்துகள்
கருத்துரையிடுக