அண்ணா நினைவு நாளை ஒட்டி விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க எம்.எல்.ஏ லட்சுமணன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!!
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரத்தில் அண்ணா நினைவு நாளை ஒட்டி மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் சென்று அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணன் தலைமையில், முன்னாள் முதல்வர் அண்ணா 57-வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி நேற்று காலை 9 மணிக்கு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்டவளாக நுழைவாயில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை அமைதி ஊர்வலம் சென்று அங்கு உள்ள அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் ஆதிதிராவிடர் நல குழு இணை செயலாளர் புஷ்பராஜ், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர செயலாளர்கள் சக்கரை. வெற்றிவேல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், வளவனூர் நகர செயலாளர் ஜீவா மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர் நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக