சென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஆமமுக பொதுச் செயலாளர். டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை!!
தாய்த்தமிழ் நிலத்திற்கு தமிழ்நாடென்று பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன்; சாமானியரும் சரித்திரம் படைக்க முடியும் என்று நிரூபித்த கொள்கைக் கோமான்; தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயம்; பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினம் இன்று.
ஆழ்ந்த அரசியல் ஞானம், சமூக மாற்றத்திற்கான சிந்தனை, மக்களின் மனங்களைப் புரிந்துகொள்ளும் மன தத்துவத்துடன், சாதி, மத பேதமற்ற சமுதாயத்தை காண விரும்பிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் வழியில் பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். -டிடிவி. தினகரன்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக