மதுரையில் மின்னல் வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகள்!!



மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருந்தது வந்து வாகனங்கள் அனைத்தும் தத்தளித்து செல்லும். இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார். மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் தமுக்கம் முதல் அண்ணாசிலை வரை ரூ. 190.40 கோடி செலவில் சுமார் 2 கி.மீ நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 80% மேல் பணிகள் முடிந்துள்ள நிலையில், பிப்ரவரி 2026-ல் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் இந்த பாலம், செல்லூர் பகுதியையும் இணைக்கும் வகையில் 61 தூண்களுடன் கட்டப்படுகிறது. 

இதன் அருகே 150 ஆண்டு கடந்த AV பாலம் பழுது அடைந்து காணப்படுகிறது இந்த AV மேம்பாலத்தையும் சீர் செய்ய வேண்டும் என்று வைகை நதி மக்கள் இயக்கம் வைகை ராஜன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பேட்டியின் போது சமூக ஆர்வலர் மு.முரளஜித் உடன் இருந்தார்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!