கலவை அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் எல்லை பிடாரி (காட்டு ஸ்ரீ செல்லியம்மன்) ஆலயத்தில் நடைபெற்ற ஜீரா தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை வாழைப்பந்தல் சாலையில், நெல் மண்டி அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் எல்லை பிடாரி (காட்டு ஸ்ரீ செல்லியம்மன்) ஆலயத்தில்

ஜீரா தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை, அஷ்ட நட்சத்திரம் – கும்ப லக்னத்தில், மேலத்தாள வாத்தியகள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவை கோயில் நிர்வாகிகள் கங்கா சுந்தரபாண்டியன், லேட் ஏழுமலை சாமியார், ராதா (எ சேட்டு) ஆகியோரின் ஏற்பாட்டில் கே. சாமிநாதன் நடத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விழாவில் முக்கிய பங்காளர்களாக தினகரன், ரூபாவதி, கோபி, சுகந்தி, அருண்குமார், ஐஸ்வர்யா, ஸ்டீபன் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!