நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசு மற்றும் அதிமுகவை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசு மற்றும் அதிமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் தலைமை வகித்தார்.மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு முன்னிலை வகித்தார்.அவைத் தலைவர். புருஷோத்தமன் வரவேற்றார்.அப்போது மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு முறையாக நிதி ஒதுக்காமல் வஞ்சனை செய்து வருகிறது.தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைத்து துறைகளிலும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்றி அந்த திட்டத்தை அழித்து கிராமப் புறங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது.. மத்திய அரசோடு சேர்ந்து அதிமுகவும் தமிழக வளர்ச்சியை தடுக்கின்றது.இதற்கெல்லலாம் வரும் சட்டசபை தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவையும். பாஜகவையும் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப உள்ளனர் என்று நிர்வாகிகள் பேசினர்.அப்போது விசி மண்டல செயலாளர். தமிழ்மாறன், ஒன்றிய செயலாளர். நரேஷ்,காங். வட்டார தலைவர். கோகுல்நாத் திமுக நிர்வாகிகள் பாண்டியன், சம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் நெமிலி பஸ் ஸ்டாண்டில் நகர திமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர். ஜனார்த்தனன் தலைமை வகித்தார்.நகர வர்த்தக அணி அமைப்பாளர். ராகேஷ் ஜெயின் முன்னிலை வகித்தார்.அப்போது மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.இதில் நெமிலி டவுன் பஞ்.தலைவர் ரேணுகாதேவி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், நகர துணை செயலாளர் ரவி. அவைத் தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக