நீதி கதவுகளுக்குப் பின்னால் அழுது கொண்டிருக்கிறது! – உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாடிய மம்தா பானர்ஜி!!


"SIR குறித்து தேர்தல் ஆணையத்துக்கு பல கடிதங்கள் எழுதியும் பதில் இல்லை. நான் ஒரு கட்சிக்காக அல்ல, ஒரு மாநில மக்களுக்காக போராடுகிறேன். நான் மேற்கு வங்க மக்களின் குரலாகவே இங்கு வந்திருக்கிறேன். SIR செயல்முறை வாக்காளர்களை நீக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு அல்ல. இது உண்மையான சரிபார்ப்பு அல்ல. நீக்குதல்கள் உள்ளூர் அதிகாரிகளால் அல்ல, மைக்ரோ-ஆப்ஸர்வர்கள் மூலம் நடக்கின்றன. இது நிர்வாக குளறுபடியையும் பாரபட்சத்தையும் ஏற்படுத்துகிறது. பெண்களின் பெயர்கள், சில சமூகங்களின் பெயர்கள் அதிக அளவில் நீக்கப்படுகின்றன. இளைஞர்கள் இறந்ததாகக் காட்டுவது, பாலின பாரபட்சம் போன்ற குளறுபடிகள் SIR-ல் உள்ளன. நீதி கதவுகளுக்குப் பின்னால் அழுது கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜரான மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாதங்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!