நத்தத்தில் கால்நடை பராமரிப்பில் புதிய மற்றும் நவீன தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்!!


நத்தத்தில் கால்நடை பராமரிப்பில் புதிய மற்றும் நவீன தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வியாழன்கிழமை நடைபெற்றது. இதில்120 பேர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் உத்தரவிற்கிணங்க மண்டல இணை இயக்குனர் விஷ்ணுகாந்த் ஆலோசனையின் படி நத்தத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஒன்றிய அளவில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக அரங்கில் கால்நடை பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் ஒரு நடந்தது. 

இதில் கால்நடை மருந்தகங்களின் உதவி மருத்துவர்கள் நத்தம் சிங்கமுத்து, கோட்டைப்பட்டி ராஜேந்திரன், லிங்கவாடி பழனிச்சாமி, குட்டுப்பட்டி சுபலட்சுமி ஆகியோர் விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பராமரிப்பது குறித்து எடுத்துரைத்து பயிற்சிகள் வழங்கினர். இதில் பங்கு பெற்ற விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பிற்கான தாது உப்புக் கலவை 1 கிலோ கிராம், தீவனச் சோள விதை 250 கிராம், மண்புழு உரம் 1 கிலோ கிராம் கொண்ட தொகுப்பு ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. இதில் 45 பெண்கள் உட்பட 120 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்ட கால்நடை பராமரிப்புத் துறையினர் செய்திருந்தனர்.

பட விளக்கம்: கால்நடை பராமரிப்பில் புதிய மற்றும் நவீன தொழில்நுட்பம் குறித்து நத்தத்தில் நடந்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாமில் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சிங்கமுத்து விளக்கினார்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!