புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் இணைந்து நடத்திய குழந்தை தொழிலாளர் ஒழிப்புப் பேரணி!!


புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் சங்கமும்  புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும்  இணைந்து  ”குழந்தை தொழிலாளர் ஒழிப்புப் பேரணி  நடத்தியது.” இந்த நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி  குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புப் பேரணி பற்றிய நோக்கஉரை நிகழ்த்தினார். பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் முன்னிலை வகித்தார்.  பள்ளியின் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட பேரணியை புதுக்கோட்டை குழந்தைகள் நலக்குழுத்  தலைவர் அமலோற்பவ ராணி  துவக்கி வைத்தார்.   அவர் பேசும்போது  ”குழந்தைகள் கல்வியைத் தொடராமல் வேறு வேலைகளுக்கு செல்லக்கூடாது, குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றால் சட்டப்படி  குற்றமாகும். 

குழந்தைகளுக்கு கல்வி கற்கவும், சுதந்திரமாக வாழவும் உரிமைகள் உண்டு. என்று குறிப்பிட்டார். முன்னதாக பேரணியில் ”குழந்தைகள் வேலைக்காக அல்ல கல்விக்காக” , ”சிறுவயதில் வேலை பெரிய கனவுகள் அழிவு”, ”குழந்தைகள் தொழிலாளர்கள் அல்ல எதிர்காலத் தலைவர்கள்” என்ற விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி மாணவர்கள் கோஷமிட்டனர். இந்த நிகழ்வுக்கு   கௌரவ விருந்தினர்களாக ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர். கருணாகரன்,  திட்டத் தலைவர் ஜி.எஸ்.எம். சிவாஜி,  ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். சரவணன், செயலாளர் எல்.மருதுபாண்டியன், பொருளாளர் ராதாகிருஷ்ணன்,  ஓவியர்  சித்ரகலா ரவி, மற்றும் பள்ளியின்  இன்ட்ராக்ட் சங்கத் தலைவர்  அ.அ.அதியன், செயலாளர் எஸ்.ஹரியுகாஸ்,பொருளாளர் ரா.அகல்யா மற்றும் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!