வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்!!

வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். N.U.சிவராமன் IPS அவர்கள் தலைமையில், மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் (Monthly Crime Review Meeting) நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் நிலையத்திற்கு வரும் புகார் மனுக்கள் மீது விரைந்து நடைவடிக்கை எடுக்க வேண்டும். கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம் மற்றும் மணல் திருட்டு போ தைப்பொருட்கள் விற்பனை, மற்றும் சட்டவிரோத மதுபாட்டில் விற்பனை போன்ற குற்றங்களை முழுமையாக தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், குற்றச்சம்பவங்களில் சம்மந் தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சரித்திர பதிவேடு குற்றவாளி கள் மற்றும் வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். நிலுவையிலுள்ள சம்மன்கள் மற்றும் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கபட வேண்டும். மதுவிலக்கு, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை முழுவதுமாக தடுக்க, மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை யை தீவிரப்படுத்த வேண்டும். விபத்துக் கள் அதிகம் நடைப்பெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். குற்ற சம்பவம் தடுப்பதற்காக மாலை நேரங்களில் வாகன ரோந்து அதிகப்படுத்தப்பட வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டுபவர் கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். சைபர் க்ரைம், பெண் கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், SC/ST வழக்குகள் குறித்தும், பெறப்படும் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கிராமம், நகரம், மற்றும் முக்கிய இடங்களான பள்ளி, கல்லூரி, கோவில்கள், முக்கிய சாலை சந்திப்பு மற்றும் சோதனை சாவடிகள், பேருந்து நிலையங்கள், போன்ற இடங்களில் CCTV கேமராக்களை அதிகப்படுத்த வேண்டும், ஏற்கனவே உள்ள CCTV கேமராக்களை செயல்பட வைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் அதிகாரிகள்/ஆளிநர்கள் மற்றும் வனத் துறை, சிறைத்துறை, தடய அறிவியல் துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், அரசுதரப்புவழக்கறிஞர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!