பண்ருட்டியில் ஆம் ஆத்மி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு லட்சுமி நாராயணபுரம் ஊராட்சி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தவறிய ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியம், புதுக்குளம் ரமேஷ், கௌரி பாபு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, புதுச்சேரி மாநில செயலாளர் ஆலடி கணேசன், விசிக அருள் செல்வம், தமிழ்மாறன், சிபிஎம் உதயகுமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஷர்மிளா பர்வீன், கடவுள், வசந்த ராஜன் மற்றும் திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி நெய்வேலி ஆம் ஆத்மி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக