பையில் முள்ளம் பன்றி... சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த வனத்துறையினர்!!
தேனி:போடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நேற்று வனத்துறையினர் வழக்கமான ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தோளில் பை சுமந்து சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்ததை கவனித்த வனத்துறையினர் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் போடி அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த பெத்தமுத்து என்பது தெரியவந்தது.
மேலும், அவர் சுமந்து வந்த பையை சோதனை செய்தபோது அதில் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட முள்ளம் பன்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முள்ளம் பன்றியை பறிமுதல் செய்த வனத்துறையினர், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெத்தமுத்துவை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக