திட்டக்குடி தொகுதி பாமகவுக்கு ஒதுக்க வேண்டும்: மகளிர் செயல்வீரர் கூட்டத்தில் தீவிர தீர்மானம்!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மகளிர் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.மாநில வன்னியர் சங்கம் துணைத் தலைவரும் பாமக நகர செயலாளருமான சுரேஷ் தலைமையில் கூட்டம் நடந்தது.பாமக மாவட்டச் செயலாளர் இ.கே. சுரேஷ் மற்றும் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கட்சியின் வளர்ச்சியை வலுப்படுத்தவும், வரும் தேர்தலில் திட்டக்குடி தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாகமாவட்டஇளைஞரணி செயலாளர் வேல்முருகன் நன்றி கூறி கூட்டம் நிறைவடைந்தது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்


கருத்துகள்
கருத்துரையிடுக