இறுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி! தொடரும் தேர்தல் ஆணையத்தின் அலட்சியம்!!


✨ தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (S.I.R) பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 23ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.

✨ அதில், திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதியில் உள்ள பூத் ஒன்றில் ஒரே நபரின் பெயர் 7 முறை பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

✨ ஒரே கதவு எண் கொண்ட (2/19) முகவரியில் மணிராஜ் த/பெ. சண்முகநாதன் என்பவரின் பெயர் 7 முறை பட்டியலில் வெளிவந்துள்ளது.

✨ S.I.R வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின் பலருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்.

✨ 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கச் சொல்லி வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்த்தது தேர்தல் ஆணையம்.

✨  இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலில் ஒரே வாக்காளரின் பெயர் பலமுறை இடம்பெற்றிருப்பது தமிழ்நாட்டில் S.I.R பணிகள் சரியாக நடைபெற்றதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!