கனவு ,செயல் ,விடா முயற்சி இதுவே வெற்றியின் தாரக மந்திரம் " - திரை கலைஞர் கணேஷ் வெங்கட் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் பேச்சு!!

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 29 வது ஆண்டு விழா விஜய் பெலசில் நடைபெற்றது. விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர். எஸ். சுப்பையா தலைமையற்றார். 

பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அறிமுக உரை நிகழ்த்தினார்.  பள்ளியின் ஆலோசகர் கவிஞர் நாகா அதியன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் கல்வி ஆண்டுக்கான ஆண்டு அறிக்கை வாசித்தார்.  விழாவில் பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, நிர்வாக இயக்குனர் நிவேதிதா மூர்த்தி, பள்ளியின் சிஇஓ காவியா மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவின் சிறப்பு விருந்தினராக மிஸ்டர் இன்டியா பட்டம்பெற்ற திரைக்கலைஞர்  கணேஷ் வெங்கட் மற்றும்  செயல் ஃபோரம் அமைப்பின் தலைவர். வெங்கடேஷ் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய் குழுமத்தின் தலைவர். முருகானந்தம், மதர் தெரசா கல்வி குழுமத்தின் தலைவர். ஆர்.சி உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பள்ளியின் எட்டாம் வகுப்பு விஷ்ணு, ஐந்தாம் வகுப்பு தான்ய ஸ்ரீ ஆகியோர் கீ போர்டு இசையுடன் இன்னிசை வழங்கினர். எட்டாம் வகுப்பு கன்யாவின் வயலின் இசை மற்றும் பள்ளி மாணவிகளின் இசை பாடல்கள் இடம் பெற்றன.   சாய் நாட்டியாலயா மாணவிகள் கவிஞர் தங்கம் மூர்த்தியின் புதுக்கோட்டை எம் புகழ் கோட்டை என்ற பாடலுக்கு அழகிய நடனம் வழங்கினர். கரகத்தில் கின்னஸ் ரெக்கார்டு செய்துள்ள கோவையைச் சேர்ந்த அனுசா ஸ்ரீ யின் பரதம் மற்றும் கரக நிகழ்ச்சிகள் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. கல்வி ஆண்டு முழுவதும் பல்வேறு தனித் திறன்களில் சாதித்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நீட் மற்றும் ஜெஇஇ வினாடி வினாவில் வெற்றி பெற்ற பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பள்ளியின் ஆண்டுமலர் விங்ஸ்   சிறப்புவிருந்தினர்  கணேஷ்  வெங்கட் வெளியிட அழகப்பா பல்கலைக்கழக மேனாள் தலைவர் சுப்பையா பெற்றுக்கொண்டார்.  .

பள்ளியின் கீ போர்டு மாஸ்டர் செந்தில்குமார் சாந்தி, இசை ஆசிரியை ஐஸ்வர்யா,  நடன இயக்குனர் அப்துல் ரகூப், ஆண்டு மலர் வடிவமைத்த காசாவயல் கண்ணன் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வியாண்டின் ரேங்க் டாப்பர்ஸ் மற்றும் ரெகுலர் அட்டெண்டன்ஸ் அவார்ட் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன. . பல்வேறு மாநிலங்களின்  பாரம்பரிய உடை அணிந்து  தேச ஒற்றுமை நடனம், மயிலாட்டம் ஒயிலாட்டம் தப்பாட்டம் காவடியாட்டம் இணைந்த நாட்டுப்புற நடனம்,  வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடனம் மழலை குழந்தைகளின் வரவேற்பு நடனங்கள் சிறப்பாக அரங்கேறின.  சிறப்பு விருந்தினர் திரைக் கலைஞர். கணேஷ் வெங்கட் குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.  அவர் பேசும்போது ”பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சாப்பிடும் போது செல்போன் பார்க்க கூடாது என்று சொல்கிறார்களே தவிர அவர்கள் சாப்பிடும் போது டிவி பார்ப்பதும் செல்போன் பார்ப்பதும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி இல்லாமல் எல்லா நல்ல விஷயங்களுக்கும் ரோல் மாடல்களாக அப்பாவும் அம்மாவும் விளங்க வேண்டும். அடுத்து குழந்தைகள்  மாணவப் பருவத்தை மகிழ்ச்சியோடும் தன்னம்பிக்கையோடும் கடந்து வர வேண்டும். கனவு, செயல், விடா முயற்சி என்ற தாரக மந்திரத்தை மாணவர்கள் மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள். தோல்விகள் நிறைய அனுபவங்களை கற்றுத் தரும். விடாமுயற்சியே வெற்றியைப் பெற்றுத் தரும். இந்த ஆண்டு விழாவிலே பாடல் இசை நடனம் என தங்களின் கலக்கலான பங்களிப்பை வழங்கிய மாணவர்களை பார்க்கிற போது பள்ளி ஆசிரியர்களின்  தன்னலமில்லா உழைப்பை என்னால் உணர முடிகிறது. பெயரில் மட்டுமல்ல கல்வியிலும் நிர்வாகத் திறனிலும் கவிதையிலும் தங்கமாக ஜொலிக்கிறார்  முதல்வர் தங்கம் மூர்த்தி அவர்கள். 

மாணவர்கள் பெற்றோர்களும் உற்றார் உறவினர்களும் சொல்லும் எதிர்மறை விமர்சனங்களை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் உங்களின் உள் உணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி உங்களை செலுத்துங்கள். வெற்றியடைவீர்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் "என்று உற்சாக உரை நிகழ்த்தினார். ஐடியல் கல்விக்குழுமம்  தாளாளர் ஷேக் சுல்தான்  உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் கல்வித்துறையை சார்ந்த அலுவலர்கள், ரோட்டரி தலைவர்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்ந்த தலைவர்கள், நகரின் பல்வேறு துறை சார்ந்த  பிரமுகர்கள், கௌரி, ரம்யா உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,  மேலாளர். ராஜா,   கமல் ராஜ்,  உதயகுமார்,  ராமன், சரசு  உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும்  ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். விழாவினை ஆசிரியர்கள். காசாவயல்கண்ணன், ஆனந்தி, சுபஸ்டி தொகுத்து வழங்கினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!