அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்கு விருப்ப மனு அளித்த எஸ்.எஸ். தினகரன்! தேமுதிக கட்சி அலுவலகத்தில் தொடங்கிய நேர்காணலில் பங்கேற்பு!!
24- சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் கழக பொதுசெயலாளர். பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பிப்ரவரி 20 முதல் மூன்று நாட்கள் நடைபெற்றது. முதல் நாளன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விருப்பமனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில், அரக்கோணம் தனி தொகுதிக்கான நேர்காணலில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், கழக தொண்டரணி துணைச் செயலாளருமான செ.தினகரனிடம் நேர்காணல் நடைபெற்றது. அப்போது தொகுதி வளர்ச்சி, கழகத்திற்கு ஆற்றிய பணி, தேர்தல்செயல்பாடுகள் குறித்து மாநில கழக நிர்வாகிகள் கேட்டறிந்தனர். இந்த நேர்கானல் நிகழ்ச்சியின் போது கழக அவைத்தலைவர். இளங்கோ, கழக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலையச் செயலாளர். பார்த்தசாரதி, கொள்கைபரப்புச் செயலாளர். அழகாபுரம், மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக