ஆலங்குடியில் நடைபெற்ற பாரத பிரதமர் நரேந்திரமோடியின் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டி!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நமோ டிராப்தி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி, கைப்பந்து, இறகுபந்து, ஆகியபோட்டிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வம்பன் நால்ரோட்டிலிருந்து ஆலங்குடி காமராஜர் சிலை வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியில் சூரன்விடுதி பசும்பொன் கிரிக்கெட் பாய்ஸ் முதல் பரிசும், வடவாளம் நம்மாழ்வார் கிரிக்கெட் குழுவினர் இரண்டாமிடத்திலும், கைப்பந்து போட்டியில் அற்புதா ஸ்போர்ட்ஸ் அகடாமி அணி முதல்பரிசும், மார்டன் மெட்ரிக் பள்ளி அணி இரண்டாம் இடத்திலும்  வெற்றி பெற்றனர், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுதொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாஜக விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் சுரேஷ் செய்திருந்தனர். மற்றும் நிர்வாகிகள்  பாஜக, அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!