கொடைக்கானல் மலைச்சாலையில் கார் விபத்து!!
கொடைக்கானல் வத்தலக்குண்டு மலைச்சாலையில் இன்று (20.02.2026) மாலை சுமார் 6.00 மணி அளவில் கார் விபத்து ஒன்று ஏற்பட்டது.
வடகரைபாறைக்கு சற்று முன்பாக சென்று கொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத் தடுப்பில் மோதியதாக கூறப்படுகிறது. மலைப்பாதையில் அதிகமான திருப்பங்கள் இருப்பதும், வேகக் கட்டுப்பாடு குறைவதும் விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன
மோதியதில் வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்தது. எனினும், நல்வாய்ப்பாக வாகனத்தில் இருந்தவர்களுக்கு எவ்வித காயமும் அல்லது உயிர் சேதமும் ஏற்படவில்லை.
சம்பவத்தால் அப்பகுதியில் சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பியது.
மலைச்சாலைகளில் பயணம் செய்யும் போது வாகன ஓட்டிகள் வேகக் கட்டுப்பாட்டை கடைபிடித்து, திருப்பங்களில் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக