குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற பூத். கமிட்டி ஆலோசனைக் கூட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்  ஆர் எஸ் ரோடு பிஏடிசி டிப்போ எதிரில் உள்ள ஶ்ரீ வைஷ்ணவி மஹாலில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர்.  ஜே. கே. என். பழனி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக  வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்  த.வேலழகன் அவர்கள் கலந்துகொண்டு பூத் கமிட்டி செயலாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்  எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் கழக பொதுச் செயலாளர்.  எடப்பாடியார் அவர்கள் அறிவித்த 10 தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர்கள். கஸ்பா ஆர். மூர்த்தி, அமுதா சிவப்பிரகாசம், கழக நிர்வாகிகள். ஏ.ரவிச்சந்திரன், எம் பாஸ்கர், அமுதா கருணா,  , எஸ் என் சுந்தரேசன், எஸ். ஐ. அன்வர் பாஷா, ஆர்.கே. மகாலிங்கம், ஜி. தேவராஜ், எஸ்.டி. மோகன்ராஜ்,  எல். ஏ. அன்பழகன்  தென்றல் குட்டி நகர மன்ற உறுப்பினர்கள். லாவண்யா, குமரன், தண்டபாணி, ரேவதி, மோகன் மற்றும் மெடிக்கல் சரவணன் உட்பட  வார்டு கழகச் செயலாளர்கள் சார்பணி செயலாளர்கள் வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் பூத் செயலாளர்கள் புக் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இறுதியாக மாவட்ட பிரதிநிதி எம். கே. சலீம் நன்றியுரை கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி .ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!