திருவண்ணாமலையில் பல்வேறு பணிகளை அமைச்சர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர். எ.வ.வேலு அவர்கள் நேரில் சென்று பல்வேறு  முடிவுற்ற பணிகளுக்கு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை செய்து வைத்து அடிக்கல் நாட்டினார்.  

(1)கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பூண்டி - பழங்கோயில்  இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

( 2)புதுப்பாளையம் பேரூராட்சியில் ரூ.4.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டினார்.

(3) செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  மண்மலையில்  1.செங்கம் புறவழி சாலை, 2.தண்டராம்பட்டு புறவழி சாலை, 3.கீழ்சிறுப்பாக்கம் புறவழி சாலை ஆகிய மூன்று புறவழிச் சாலைகள் அமைக்கும் பணி துவக்க விழா மற்றும் செங்கம் நகரம், தோக்கவாடி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.  

முடியுற்ற பணிகளை திறந்து வைத்தும் மேற்கண்ட புறவழிச் சாலை பணிகளையும் துவக்கி வைத்தார்.

உடன் இந்நிகழ்வில், தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர். கு.பிச்சாண்டி., மாவட்ட கழக துணை செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர். மு.பெ.கிரி.MLA CN.அண்ணாரை.MP, 

மாவட்ட ஆட்சித்தலைவர். க.தர்பகராஜ்.இ.ஆ.ப., மற்றும்  அரசு அலுவலர்கள் , நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!