அரக்கோணத்தில் பள்ளி மாணவர்களுக்கு நல திட்ட உதவி சமூக நிறுவனம் வழங்கியது!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. செண்ட்ரல் மேல்நிலைப் பள்ளி உள்ளது இந்தப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் 93 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் ராபர்ட் தலைமையில் நடைபெற்றது
இந்த விழாவில் பங்கேற்ற அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சுகந்தி விநினோதினி பொது தேர்வு எழுதும் அனைவருக்கும் நல திட்டவுதவிகளை வழங்கினார்
மேலும் நீட் தேர்விற்கு தயாராக காத்திருக்கும் ஏழு மாணவிகளை ஊக்கப்படுத்தும் முகமாக ஸ்டெத்ல்கோப் வழங்கப்பட்டது இந்த விழாவில் உதவிதலைமை ஆசிரியர் வில்சன் மற்றும் சாரா யூனிஸ் ஆகியோருடன் ஆசிரியர்கள் கோல்டா மோர், ஜாய்ஸ் உடன் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக