இராமசாமிபட்டியில் த.வெ. க கொள்கை விளக்க பொதுக்கூட்டம் –ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர். மதன் தலைமையில் நலத்திட்ட உதவிகள்!!
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இராமசாமிபட்டியில் தமிழகவெற்றிக்கழகத்தின் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்கவும், கழகத்தின் பொதுச்செயலாளர். என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர். மதன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர். வீரபாண்டி அவர்கள் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.
நிகழ்ச்சியில் கழகத்தின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர மற்றும் கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் கமுதி ஒன்றியத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து அதிகளவில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர். நிகழ்ச்சி உற்சாகமான சூழலில் நடைபெற்றதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக